வறுமை காரணமாக மூன்றாவது குழந்தையை கழுத்தை அறுத்து கொன்ற தந்தை

அதிர்ச்சித் தகவல்

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பழங்குடி கிராமம் ஒன்றை சேர்ந்த விவசாயி ஜீவா என்பவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்

ஊரடங்கு உத்தரவு காரணமாக மூன்று குழந்தைகளை வைத்து அவர் சமாளிக்க முடியாமல் வறுமை காரணமாக குழந்தைகளுக்கு சாப்பாடு கூட போட முடியாத நிலையில் இருந்துள்ளார்.

இதனால் அவர் மிகுந்த வருத்தமுடன் இருந்த நிலையில் திடீரென அவர் தனது மூன்றாவது குழந்தையை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டதாக கூறப்படுகிறது

இது குறித்து காவல்துறையினர் விசாரித்தபோது தன்னால் மூன்று குழந்தைகளுக்கும் உணவு ஏற்பாடு செய்து கொடுக்க முடியவில்லை என்றும் அதனால் ஒரு குழந்தையை கொன்று விட்டால் மீதம் இரண்டு குழந்தைகளையாவது நல்லபடியாக வளர்க்கலாம் என்று கருதி கொலை செய்ததாகவும் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

வறுமை காரணமாக பெற்ற குழந்தையை கொலை செய்த தந்தையால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published.