அப்பாவும் மகனும் ஒரே நேரத்தில் பட்டப்படிப்பை முடித்த அதிசயம்

அப்பாவும் மகனும் ஒரே நேரத்தில் பட்டப்படிப்பை முடித்த அதிசயம்

மும்பையில் அப்பாவும் மகனும் ஒரே நேரத்தில் பட்டப்படிப்பை முடித்துள்ள அதிசயம் நடந்துள்ளது.

மும்பையில் கால்டாக்சி ஓட்டி வரும் எம்.எப்.ஷேக் என்பவரும் இவருடைய மகனும் அவரது மகனும் ஒரே நேரத்தில் டிகிரி படிப்பை முடித்துள்ளனர். டிரைவராக வேலை செய்து வரும் ஷேக்கிற்கு இளம் வயதிலேயே பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் குடும்ப சூழ்நிலை, வறுமை காரணமாக தனது கனவு நிறைவேறவில்லைல்

இந்த நிலையில் தனது மகன் டிகிரி படித்து கொண்டிருந்ததால் அவரிடம் சந்தேகங்கள் கேட்டு தனது பட்டப்படிப்பு கனவை நிறைவேற்றியூள்ளார். இதுகுறித்து ஷேக் மகன் கூறியதாவது: படிப்பதற்கு வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபித்து எனது தந்தத பட்டப்படிப்பை நிறைவு செய்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

மேலும், தான் முழுநேர வகுப்பில் படித்ததாகவும் தனது தந்தை பகுதி நேர வகுப்பில் வார விடுமுறை தினங்களில் மட்டுமே படித்ததாகவும் கூறிய ஷேக்கின் மகன், படிப்பில் தந்தையின் சந்தேகங்களை தீர்த்து வைத்தபோது மகிழ்ச்சியாக உணர்ந்ததாக தெரிவித்தார்.

கல்வி பயில விடா முயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் மட்டுமே போதுமானது வயது ஒரு தடையில்லை என்பது ஷேக்கின் விஷயத்தில் மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.