shadow

கடல் நீரை ரத்தக்களறியாக்கிய திருவிழா கொண்டாட்டம்

டென்மார்க் நாட்டிற்கு சொந்தமான Faroe Islands என்ற தீவில் வாழும் மக்கள் ஒவ்வொரு வருடமும் கடலில் கரையருகே வரும் திமிங்கலத்தை கொல்லும் திருவிழா ஒன்றை நடத்தி வருகின்றனர். இதனால் கடல் நீரின் பெரும்பகுதி சிவப்பு நிறத்தில் ரத்தக்களறியாக மாறிவிடுகிறது.

ஒவ்வொரு வருடமும் ஒரு குறிப்பிட்ட நாளில் இந்த பகுதியில் உள்ள ஆண்கள், பெண்கள் என அனைவரும் திமிங்கல வேட்டையாடுகின்றனர். கடலின் உள்பகுதி வரை சென்று திமிங்கலத்தை பிடித்து வந்து கரையில் அதை வெட்டி தள்ளுகின்றனர். இதனால் திமிங்கலத்தில் இருந்து பீறிட்டு வரும் ரத்தம் கடல் நீரையே செந்நீராக்கிவிடுகிறது.

இந்த திருவிழாவால் நூற்றுக்கணக்கில் திமிங்கலங்கள் கொல்லப்படுவதுடன் சுற்றுச்சுழலும் கெடுவதால் இந்த திருவிழாவை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அந்த பகுதியில் உள்ள சமூலநல ஆர்வலர்கள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply