shadow

1000 கிலோ வெங்காயம் விற்றால் லாபம் 1 ரூபாய். விவசாயிகள் ஏன் தற்கொலை செய்ய மாட்டார்கள்?
onion
தமிழகம் உள்பட இந்தியாவின் பல மாநிலங்களில் விவசாயிகள் வறுமை காரணமாக தற்கொலை செய்துவரும் நிலையில் வெங்காயம் சாகுபடி செய்த மகாராஷ்டிரா விவசாயி ஒருவர் தன்னுடைய நிலத்தில் விளைந்த 1000 கிலோ வெங்காயத்தின் மூல, ஓரே ஒரு ரூபாய் மட்டுமே லாபம் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த தேவிதாஸ் பர்பானே என்ற விவசாயி இதுகுறித்து கூறியதாவது: 2 ஏக்கர் நிலத்தில் ரூ. 80 ஆயிரம் செலவு செய்து வெங்காயம் சாகுபடி செய்தேன். கடந்த 10-ம் தேதி, 952 கிலோ வெங்காயத்தை 18 சாக்கு மூட்டைகளில் பிடித்து, லாரி மூலம் புனேவில் உள்ள வேளாண் விளைபொருள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு அனுப்பி வைத்தேன்.

அங்கு, ஒரு கிலோ ரூ.1.60-க்கு எடுத்துக் கொண்டார்கள். இதனால் 952 கிலோ வெங்காயத்துக்கு ரூ. 1,523.20 கிடைத்தது. இடைத்தரகர் ரூ.91.35-ம், தொழிலாளர்களுக்கு ரூ. 59 மற்றும் ரூ. 18.55 கூலியும் இதர செல வினங்களுக்காக ரூ. 33.30 மற்றும் லாரி வாடகையாக ரூ.1,320ம் போக எனக்கு மிஞ்சியது வெறும் ரூ.1 தான்.  ஒரு கிலோ 3 ரூபாய்க்காவது விற்பனையாகும் என எதிர்பார்த்தேன். ஆனால், இவ்வளவு குறைந்ததால் ஏமாற்றம் அடைந்தேன். 4 மாதங்கள் கடுமையாக உழைத்து பயிர்களைப் பார்த்துக் கொண்டேன். கடும் மின்தட்டுப்பாட்டுக்கு இடையிலும் நீர் பாய்ச்சினேன். லாபத்தை விடுங்கள். போட்ட முதலீட்டைக் கூட எடுக்க முடியாது போலிருக்கிறது’ என்று பரிதாபமாக கூறினார்.

Leave a Reply