ஸ்டைலான கிரிக்கெட் வீரர் என்று வர்ணிக்கப்பட்ட பேரி சின்க்லேயர், நியூசிலாந்து அணிக்காக 1963 முதல் 1968-ம் ஆண்டு வரை விளையாடியுள்ளார். இந்த காலகட்டத்தில் 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்
இவர், தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக தலா ஒரு சதம் அடித்து, மொத்தம் 1,148 ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டியில் ஆயிரம் ரன்களை எடுத்த முதல் 3-வது வீரராவார்.
நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், ஸ்டைலிஷான விளையாட்டு வீரர் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டவருமான பேரி சின்க்லேயர் காலமானார். அவருக்கு வயது 85.