மராத்தி மொழியில் குணசித்திர வேடங்களில் நடித்து வரும் நடிகை அல்கா புனீவர் என்பவர் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி படப்பிடிப்புக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பும் வழியில் திடீரென காணாமல் போனார். அவர் காணாமல் போனதை அறிந்து பதறியடித்த குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். இந்த செய்தியை மராத்தி மற்றும் இந்தி மொழி ஊடகங்கள் பரபரப்புடன் வெளியிட்டு வந்தன.

இந்நிலையில் நடிகை அல்கா புனீவரின் கார் டிரைவர் சென்னையில் இருப்பதாக அவரது செல்போன் சிக்னலை வைத்து மும்பை போலீஸார் கண்டுபிடித்தனர். பின்னர் சென்னை வந்த அவர்கள் சென்னை போலீஸார்களின் உதவியோடு டிரைவரை கைது செய்து விசாரணை செய்தனர்,

அவர் கொடுத்த தகவலின்படி காணாமல் போன நடிகையை பத்திரமாக போலீஸார் மீட்டனர். ஆனால் அவர் எங்கு இருந்தார், கடத்தி வரப்பட்டாரா? அல்லது டிரைவருடன் உடன்பட்டுதான் வந்தாரா என்ற கேள்விகளுக்கு பதிலளிக்க போலீஸார் மறுத்துவிட்டனர். குடும்ப பிரச்சனை காரணமாக அவர் சம்மதத்துடன்தான் டிரைவர் அவரை சென்னைக்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.

Leave a Reply