shadow

11ம் வகுப்பில் தோல்வியா? உடனடி மறுதேர்வு அறிவிப்பு

2021-22ம் கல்வியாண்டுக்கான 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (ஜூன் 27) வெளியாகியுள்ளது.

இந்தப் பொதுத்தேர்வில் 90.07% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு உடனடி மறுதேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது.

இதற்காக வரும் 29 முதல் ஜூலை 6 வரை அந்தந்த பள்ளிகள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.