அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் தெலுங்கு திரைப்படம் புஷ்பா. இந்த படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி இருந்த நிலையில் அவர் சமீபத்தில் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டார்
இந்த நிலையில் இந்த படத்தின் வில்லனாக பகத் பாசில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தெலுங்கு உள்பட ஐந்து மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் ரிலீசாக உள்ளது
இந்த படத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார் என்பதும், மேலும் ஜெகபதி பாபு பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.