இன்றைய இளைஞர்கள் ஃபேஸ்புக்கிற்கு அடுத்தபடியாக உபயோகபடுத்துவது வாட்ஸ் அப் என்னும் அப்ளிகேஷனைத்தான். இதில் மெசேஜ்கள், புகைப்படங்கள், வீடியோக்களை இலவசமாக பரிமாறிக்கொள்ளலாம். இத்தகைய பெருமை வாய்ந்த வாட்ஸ் அப் நிறுவனத்தை ஃபேஸ்புக் கைப்பற்றி இருக்கிறது. ஆம் 19 பில்லியன் அமெரிக்க டாலருக்கு ஃபேஸ்புக் வாட்ஸ் அப்பை விலைக்கு வாங்கியுள்ளது.

இதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது. உலகில் 40 கோடிக்கும் அதிகமானோர் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றனர். பேஸ்புக், டுவிட்டருக்கு ஒரே போட்டியாக இருந்த வாட்ஸ் அப் தற்போது பேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்துள்ளதால் போட்டியே இல்லாமல் இணைய உலகில் இனி பேஸ்புக் வலம் வரும். மொத்தம் 19 பில்லியனுக்கு வாட்ஸ் அப்பை விலை பேசியுள்ள பேஸ்புக், ரொக்கமாக 4 பில்லியன் டாலரும், 15 பில்லியன் டாலருக்கு பங்குகளாக வாங்கவும் இசைந்துள்ளது.

 

[embedplusvideo height=”300″ width=”500″ editlink=”//bit.ly/1hasm1q” standard=”//www.youtube.com/v/VKpCEXnQb3Y?fs=1″ vars=”ytid=VKpCEXnQb3Y&width=500&height=300&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep4410″ /]

Leave a Reply