அரசு அலுவலகங்களில் ஃபேஸ்புக், டுவிட்டர் பயன்படுத்த தேர்தல் ஆணையம் திடீர் தடை.

Facebook-on-Computers-e1328150460547

 

அரசு அலுவலகங்களில் இருந்து கொண்டு ஒரு கட்சிக்கு சாதகமாக ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்து வருவதாக வரும் புகார்களை அடுத்து அரசு அலுவலகங்களில் ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற இணையதளங்களை தடைசெய்ய  தேர்தல் ஆணையம் உத்தரவு விதித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் கட்சியின் கொள்கை பிரசாரத்தை பலவழிகளில் தொடங்கியுள்ளன. இதில் ஒருவகையாக தாங்கள் சார்ந்துள்ள கட்சிக்கு  ஆதரவாக அரசு ஊழியர்கள் அரசு அலுவலகங்களில் இருந்து கொண்டே தங்கள் பணியை செய்யாமல் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருவதாக இந்தியா முழுவதும் இருந்து தேர்தல் ஆணையத்துக்கு ஏகப்பட்ட புகார்கள் வந்தன.

இதையடுத்து, அரசு அலுவலகங்களில் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்து இன்று உத்தரவு பிறப்பித்தது. இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும், இந்த தடையுத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை அவர்கள் துறைரீதியாக எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Leave a Reply