பெட்ரோல் டீசலுக்கான கலால் வரி மீண்டும் உயர்வு: மக்கள் தலையில் மிளகாய்

பெட்ரோல் டீசலுக்கான கலால் வரி மீண்டும் உயர்வு: மக்கள் தலையில் மிளகாய்

கொரோனா வைரஸ் காரணமாக கச்சா எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் படு வீழ்ச்சி அடைந்து உள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்திய அரசு பெட்ரோல் டீசலுக்கான கலால் வரியை ரூபாய் மூன்று உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது மீண்டும் பெட்ரோல் டீசலுக்கான கலால் வரியை ரூ.8 உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது

இதற்கான குரல் வாக்கெடுப்பு நேற்று மக்களவையில் நடந்து வெற்றிகரமாக நடந்த நிலையில் பெட்ரோல் விலையும் டீசல் விலையும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் இந்தியாவில் ரூபாய் 30க்கும் குறைவாக பெட்ரோல் டீசல் விற்கும் நிலை உள்ளது. ஆனால் எப்போதும் போல் ரூபாய் 70க்கு மேல் தான் தற்போது விற்பனையாகி வருகிறது. பொதுமக்கள் தலையில் மிளகாய் அரைக்கும் பணியை தொடர்ந்து மத்திய அரசு செய்து வருவதாக நெட்டிசன்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Leave a Reply