shadow

அதிகளவு ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்…அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

ஸ்மார்ட்போனும் கையுமாக 24 மணி நேரமும் இருக்கும் இன்றைய இளையதலைமுறையினர்களூக்கு அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். இதன்படி அதிக நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர்களுக்கு மனச்சோர்வு அதிகளவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மாகாண பல்கலைக்கழகத்தின் சுகாதார கல்வி பேராசிரியர் எரிக் பெப்பர், இணை பேராசிரியர் ரிச்சர்டு ஹார்வி நடத்திய ஆராய்ச்சியில், மிக அதிக அளவில் ‘ஸ்மார்ட் போன்’ பயன்படுத்துகிற மாணவர்கள் தனிமை உணர்வுக்கும், மனச்சோர்வுக்கும், பதற்றத்துக்கும் ஆளாவது தெரிய வந்து உள்ளது.

வலி தாங்க முடியாமல் வலி நிவாரணிகளை எடுத்து, அதற்கு அடிமையாகி விடுவதுபோல, ஒரு கட்டத்தில் ‘ஸ்மார்ட் போன்’ பயன்படுத்துவோர் அதற்கு அடிமையாகி விடுவதாக இந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

‘ஸ்மார்ட் போன்’ பயன்படுத்துவோர் தனிமை உணர்வுக்கு தள்ளப்படுவதற்கு காரணம், அவர்கள் சக மனிதர்களிடம் முகம் பார்த்து பேசாமல் போய்விடுவதுதான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

Leave a Reply