கீழ்ப்பாக்கத்திற்கு அனுப்ப வேண்டியவர் கவர்னரா? கிரண்பேடி குறித்து ஈவிகேஸ் இளங்கோவன்

கீழ்ப்பாக்கத்திற்கு அனுப்ப வேண்டியவர் கவர்னரா? கிரண்பேடி குறித்து ஈவிகேஸ் இளங்கோவன்

கடந்த சில மாதங்களாகவே புதுவை முதல்வர் நாராயணசாமிக்கும் கவர்னர் கிரண்பேடிக்கும் இடையே மோதல்கள் நடந்து வருகிறடு. சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட புதுவை பட்ஜெட் தினத்தன்று கூட கவர்னருக்கு புதுவை அரசு அழைப்பு விடுக்கவில்லை.

இந்த நிலையில் இன்று புதுவை சென்று முதல்வர் நாராயணசாமியை சந்தித்து பேசினார் முன்னால் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘கீழ்ப்பாக்கம் செல்ல வேண்டியவரை மத்திய அரசு புதுச்சேரிக்கு கவர்னராக அனுப்பி வைத்து விட்து என்று புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியை கடுமையாக விமர்சித்தார். புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி நன்றாகத் தான் ஆட்சி செய்து வருவதாகவும் இதை பொறுக்க முடியாத மத்திய அரசு கவர்னர் மூலம் குடைச்சல் கொடுப்பதாகவும் கூறினார்.

இந்நிலையில் இன்று கிரண்பேடி அளித்த பேட்டியில், ‘எக்காரணம் கொண்டும் ரப்பர் ஸ்டாம்ப் போன்று செயல்பட மாட்டேன்; வாயை மூடிக் கொண்டும் இருக்க மாட்டேன். யூனியன் பிரதேசத்தில் துணை நிலை ஆளுநருக்குத்தான் முழு அதிகாரம் உள்ளது. தற்போது நடந்துகொண்டு இருக்கும் சம்பவம் மனக்கசப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் விவாதித்து வருகிறேன். மக்கள் வளர்ச்சிக்காக தொடர்ந்து செயல்படுவேன் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply