shadow

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க ஐரோப்பிய யூனியன் முடிவு. இங்கிலாந்து ஏற்குமா?

ltteஇலங்கையில் தனி தமிழீழத்திற்காக போராடிய விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த தடையை ஐரோப்பிய யூனியன் நீக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

விடுதலைப்புலிகள் இயக்கம் மற்றும் பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பு ஆகிய இரண்டு அமைப்புகளுக்கும் விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்க ஐரோப்பிய நீதிமன்றத்தின் மூலம் நீதிபதி ஒருவர் அறிக்கை ஒன்றை ஐரோப்பிய யூனியனுக்கு சமர்பித்தார். ஆனால் இந்த இரு அமைப்புகளுக்குமான தடையை நீக்க இலங்கை அரசும், இஸ்ரேல் அரசும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்தியாவின் தரப்பில் இருந்து புலிகளின் தடையை நீக்க எந்தவித எதிர்ப்போ, ஆதரவோ தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் இலங்கை மற்றும் இஸ்ரேல் நாடுகளின் எதிர்ப்புகளை மீறி தடைப் பட்டியலில் இருந்து இவ்விரு அமைப்புகளின் பெயர்களை நீக்க உள்ளதாக ஐரோப்பிய யூனியன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதுகுறித்த சுற்றிக்கை தயாராகி வருவதாகவும் விரைவில் வெளியாகவுள்ளதாகவும் ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து சமீபத்தில் வெளியேற முடிவெடுத்துள்ளதால் இந்த முடிவுக்கு இங்கிலாந்து கட்டுப்பட வேண்டும் என்று அங்கு வாழும் தமிழர்கள் அழுத்தம் கொடுக்கலாம் என்றும் இந்த அழுத்தம் காரணமாக இங்கிலாந்தும் விடுதலைப்புலிகள் மீதான தடையை விலக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply