ஓய்வு பெற 3 நாட்களே இருந்த நிலையில் ஈரோடு நகர டிஎஸ்பி சுரேஷ் திடீர் சஸ்பெண்ட்
ஈராடு நகர டிஎஸ்பி சுரேஷ் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை டிஜிபி டி.கே.ராஜேந்திரன் வெளியிட்டுள்ளதால் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈராடு நகர டிஎஸ்பி சுரேஷ் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் தனிப்பிரிவு ஆய்வாளராக பணியாற்றியபோது விசாரணை கைதி ஒருவர் உயிரிழந்தது குறித்த வழக்கு காரணமாக இந்த சஸ்பெண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டிஎஸ்பி சுரேஷ் அவர்கள் ஓய்வு பெற இன்னும் 3 நாட்களே இருந்த நிலையில் இன்று அவர் திடீரென பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.