திமுக தலைவர் கருணாநிதிக்கு இலங்கை எதிர்க்கட்சி தலைவர் வாழ்த்து

திமுக தலைவர் கருணாநிதிக்கு இலங்கை எதிர்க்கட்சி தலைவர் வாழ்த்து
karunanidhi
நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் கருணாநிதி 13வது முறையாக எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தொடர்ச்சியாக 13 முறை எம்.எல்.ஏவாக தேர்வான கருணாநிதிக்கு, இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டணியின் தலைவருமான ஆர்.சம்பந்தன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருணாநிதிக்கு ஆர்.சம்பந்தன் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: நீங்கள் ஆட்சிக்கு வரவில்லை என்றாலும், வலிமையான எதிர்கட்சியாக உருவெடுத்துள்ளீர்கள். இலங்கை தமிழ் மக்கள் சார்பில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கை தமிழர்களின் பிரச்சனைகளுக்கு நியாயமான, நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்க உங்களது ஆக்கப்பூர்வமான பங்களிப்பு இருக்க வேண்டும் என விரும்புகிறோம்’ இவ்வாறு அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வென்று எதிர்க்கட்சித் தலைவராக இரா. சம்பந்தன் தேர்வு செய்யப்பட்டபோது கருணாநிதி அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.