3 நாளில் 11 லட்சம் கோடி இழப்பு: பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

3 நாளில் 11 லட்சம் கோடி இழப்பு: பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை வெகுவாக சரிந்து வரும் நிலையில் கடந்த மூன்று நாட்களில் 11 லட்சம் கோடி முதலீட்டாளர்கள் இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

மூன்று நாட்கள் தொடர்ச்சியாக பங்குச்சந்தை சரிந்தது. சென்செக்ஸ் 1134 புள்ளிகள் சரிந்து உள்ளதாகவும் இதனால் பங்கு சந்தை முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டம் என்றும் கூறப்படுகிறது

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டை வெளியே எடுத்து வருவதால்தான் இந்த மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது

இதனால் பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள் மாற்று முதலீட்டை அணுகி வருவதாகவும் கூறப்படுகிறது