இலங்கையின் 10 வருட உலக சாதனையை தகர்த்தது இங்கிலாந்து கிரிக்கெட் அணி

இலங்கையின் 10 வருட உலக சாதனையை தகர்த்தது இங்கிலாந்து கிரிக்கெட் அணி

251325.3ஒருநாள் போட்டியில் அதிகபட்சமாக 443 ரன்கள் அடித்து கடந்த 2006ஆம் ஆண்டு இலங்கை அணி உலக சாதனை நிகழ்த்தியிருந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது இந்த் சாதனையை இங்கிலாந்து அணி தகர்த்துள்ளது.

நேற்று பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடிய இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர் ஹேல்ஸ் மிக அபாரமாக விளையாடி 122 பந்துகளில் 22 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 171 ரன்கள் எடுத்தார். இதுவே இங்கிலாந்து அணி வீரர் ஒருவரின் தனிப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

இந்நிலையில் 445 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணி 42.4 ஓவர்களில் 275 ரன்களுக்கு ஆட்டமிழந்து 169 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தொடரில் இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.