shadow

2 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து த்ரில் வெற்றி

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய 6வது போட்டியில் இங்கிலாந்து அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 194 ரன்கள் எடுத்தது. மோர்கன் ஆட்டமிழக்காமல் 80 ரன்கள் எடுத்தார். பின்னர் 195 என்ற இலக்கை நோக்கி விளையாடி நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 192 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

கடைசி ஓவரில் 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பத்து ரன்கள் மட்டுமே எடுத்ததால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. மோர்கன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.,

Leave a Reply