shadow

ஐரோப்பிய யூனியன் விவகாரம்: பொதுமக்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக பின்வாங்குமா இங்கிலாந்து

englandஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற வேண்டும் என்று வாக்களித்த இங்கிலாந்து மக்கள் இப்போது வெளியேற வேண்டாம் என்று போர்க்கொடி உயர்த்தியுள்ளன.அர் இதற்காக நேற்று லண்டனில் ஆயிரக்கணக்கானோர் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கையில் ஐரோப்பிய யூனியன் கொடியினையும், கோரிக்கை பலகைகளையும் தாங்கியவாறு அவர்கள் பேரணியாக சென்றனர்.

இந்த பேரணியின் போது, “நாம் என்ன செய்ய வேண்டும்? ஐரோப்பிய யூனியனிலே இருக்க வேண்டும்” என்று அவர் முழக்கமிட்டனர். வெஸ்ட் மினிஸ்டர் நகரத்தை நோக்கி அவர்கள் பேரணியாக சென்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் 2வது முறையாக வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

முன்னதாக கடந்த வியாழக்கிழமை இணையத்தள பிளாக் ஒன்றில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 60 பேர் ஐரோப்பிய யூனியனில் நீடித்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும்போது ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் முடிவில் இருந்து இங்கிலாந்து பின்வாங்கும் என்று கருதப்படுகிறது.

Leave a Reply