வெற்றியின் விளிம்பில் இந்திய அணி!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது

இந்த போட்டியில் இந்தியா முதல் இன்னிங்சில் 191 ரன்களும் இரண்டாவது இன்னிங்சில் 466 ரன்கள் எடுத்திருந்தது.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 290 ரன்கள் எடுத்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் 368 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கியது

சற்றுமுன் வரை இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்திருப்பதால் வெற்றியின் விளிம்பில் இந்தியா உள்ளது.