மே.இ.தீவுகளுக்கு முதல் வெற்றியா?

இங்கிலாந்து தோல்வி முகம்

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகள் வெற்றி பெறும் நிலையில் உள்ளது

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 204 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் முதல் இன்னிங்ஸ் 318 ரன்கள் குவித்தது

இந்த நிலையில் தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி 284 ரன்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்துள்ளது. இதனல் 170 ரன்கள் மட்டுமே முன்னிலை வகித்துள்ளது

இன்று ஒரு சில ஓவர்களிலேயே மீதமுள்ள இரண்டு விக்கெட்டுக்களை இழந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மேற்கிந்திய தீவுகள் அணி இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published.