பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான சர்வதேச விமான நிறுவனத்தில் விமானியாக பணி புரிந்து வருபவர் பியாஸ். இவர் கடந்த செப்டம்பர் மாதம் 18-ம் தேதி லண்டனில் இருந்து பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகருக்கு145 பயணிகள் மற்றும் 11 விமான சிப்பந்திகள் என 156 பேருடன் இயக்கப்படும் விமானத்தின் பைலட்டாக பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது விமானத்தை இயக்குவதற்கு முன்னர் பைலட்டிற்கு நடத்தப்படும் சோதனையில் அவர் அளவிற்கு அதிகமான அளவு மது அருந்தியிருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து நடந்து வந்த விசாரணையின் முடிவில் அவருக்கு ஒன்பது மாதம் சிறை தண்டனை விதித்து தீர்பளித்தார் லண்டன் நீதிமன்ற நீதிபதி பீட்டர் பவுல்சன் . தனது தீர்ப்பில் பியாசின் செயல் கடுமையான குற்றத்திற்கு ஒப்பானது என கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பியாஸ் வழக்கு மீதான தீர்ப்பு குறித்து பாகிஸ்தானின் சர்வதேச விமான நிறுவன ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டு்ள்ள அறி்க்கையில் பியாஸ் தண்டனை காலம் முடிவடைந்து பின்னர் இஸ்லாமாபாத்திற்கு வந்த பின்னர் முடிவு செய்யப்படும். அதிகபட்ச தண்டனையாக அவர்பணியி்லிருந்து விடுவி்க்கப்படாலம் என தெரிவித்தார்.

Leave a Reply