shadow

இங்கிலாந்து, பாகிஸ்தான் என வளைத்து வளைத்து கைது செய்யப்படும் மீனவர்கள். என்ன செய்கிறது மோடி அரசு?

இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க கடலில் சென்றால் திரும்பி வந்தால்தான் உறுதி என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு பக்கம் காலங்காலமாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து வருகின்றனர். இந்த பிரச்சனைக்கு பல அரசுகள் மாறி மாறி வந்தபோதிலும் நிரந்தர தீர்வு ஏற்படுத்த முடியவில்லை.

இந்நிலையில் இன்று ஒரே நாளில் குஜராத்தை சேர்ந்த மீனவர்களை பாகிஸ்தான் படையினர்களும், கொச்சியில் இருந்து மீன்பிடிக்க சென்ற கன்னியாகுமரி மீனவர்களை இங்கிலாந்து படையினர்களும் பிடித்து வைத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தை சேர்ந்த மீனவர்கள் அரபிக்கடல் பகுதியில் நேற்று மீன் பிடித்து கொண்டிருந்தபோது அங்கு ரோந்துக்கு வந்த பாகிஸ்தான் படையினர் தங்கள் நாட்டுக்கு சொந்தமான கடல் பகுதிக்குள் நுழைந்து மீன்பிடித்ததாக குற்றம்சாட்டி பத்துக்கும் அதிகமான படகுகளை பறிமுதல் செய்ததுடன் அவற்றில் இருந்த 70 மீனவர்களையும் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் கொச்சியில் இருந்து மீன்பிடிக்க சென்ற கன்னியாகுமரி மீனவர்கள் 29 பேர்களை இங்கிலாந்து கடற்படையினர்களால் சிறைபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இங்கிலாந்து நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள டிக்கா கார்ஷியா தீவின் எல்லைக்குள் மீன் பிடித்ததாக கூறி அந்நாட்டு கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது

இலங்கை, பாகிஸ்தான், இங்கிலாந்து என சுற்றிசுற்றி மீனவர்கள் கைது செய்யப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் மத்திய அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர் பிரதிநிதிகள் வலியுறுத்துகின்றனர்.

Leave a Reply