shadow

முன்னாள் அமைச்சர் தங்கமணி அவர்களுக்கு தொடர்புடைய பல இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை செய்து வருகின்றனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாகவும், குறிப்பாக நாமக்கல்லில் மட்டும் 10 இடங்களிலும் ஈரோட்டில் 3 இடங்களிலும் சேலத்தில் ஒரு இடத்திலும் சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணி வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை செய்யப்பட்டதில் ஏராளமான ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் இன்று மீண்டும் சோதனை நடைபெறுகிறது.,