shadow

power_project_2308003gசென்னையில் தினந்தோறும் சுமார் 5 லட்சம் டன் குப்பைகள் சேருகிறது. சென்னை நகரை குப்பையில்லா நகரமாக மாற்ற முதல்கட்டமாக காய்கறி கழிவுகள் மூலம் மின்சாரம் தயாரிக்க மாநகராட்சி முடிவு செய்தது.

இதன்படி  மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தின்  தொழில்நுட்பத்தின் உதவியுடன், சென்னை அருகேயுள்ள புளியந்தோப்பில் காய்கறி கழிவுகளில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் ஆலையை மாநகராட்சி அமைத்துள்ளது.

இந்த ஆலையில் தினசரி 2 லட்சம் டன் கழிவுகளில் இருந்து 2 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அம்மா உணவகங்கள் மற்றும் பெரிய ஓட்டல்களில் இருந்து வரவழைக்கப்பட்ட காய்கறி கழிவுகளில் இருந்து முதல்கட்டமாக மின் உற்பத்தி சோதனை ஓட்டமாக நடத்தி பார்க்கப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக முடிவடைந்ததை ஒட்டி, வரும் 24ஆம் தேதி முதல் இந்த மின் உற்பத்தி நிலையம் செயல்பட தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தபோது, “சுமார் ரூ.40 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த நிலையத்தை ஹாலந்து நாட்டின் ‘ஹியுபர்ட் யுரோ கேர்’ நிறுவனம் இயக்கி, பராமரிக்கும். தற்போது, நாளொன்றுக்கு 500 கிலோ காய்கறிக் கழிவு மூலம் மின்னுற்பத்தி செய்யப்பட்டு, அருகில் உள்ள 20 தெருவிளக்குகளுக்கு மின்சாரம் அளிக்கப்பட்டு வருகிறது.

இது முழுவதுமாக செயல்படும்போது, 2 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகும். அப்போது, இந்த ஆலை செயல்படுவதற்கான மின்சாரத்தை எடுத்துக் கொண்டு, 150 தெருவிளக்குகளுக்கு மின்சாரம் அளிக்கப்படும். தற்போது, சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. இன்னும் சொற்ப அளவிலான பணிகள் உள் ளன. அதை முடித்து, ஜெயலலிதா பிறந்த நாளான வரும் பிப்ரவரி 24-ம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக மின்னுற் பத்தியைத் தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply