shadow

­14

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் 24ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பல தனியார் நிறுவனங்கள் தங்கள் கருத்துக்கணிப்பை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் நமது சென்னை டுடே நியூஸ் இணையதளம் சார்பில் நாமும் ஒரு கருத்துக்கணிப்பை எடுத்துள்ளோம்.

சென்னையில் எங்கள் குழுவினர் பொதுமக்களை சந்தித்து கருத்து கேட்ட வகையில் 90% பேர் தங்கள் வாக்குகளை அதிமுக கட்சிக்கே அளிக்க இருப்பதாக தெரிவித்தனர். 7 சதவிகிதத்தினர் திமுகவுக்கும் 3 சதவிகிதத்தினர் பாஜக அணிக்கும் வாக்களிக்க விரும்புவதாகவும் கூறினர்.

நடைபெற இருப்பது பாராளுமன்ற தேர்தல் எனினும் தமிழகத்தை பொறுத்தவரை போட்டி அதிமுகவிற்கு திமுக அணிக்கும் இடையேதான் போட்டி என்று பலர் கருத்து தெரிவித்தனர். மோடிதான் பிரதமர் வேட்பாளர் என்பதை பலர் ஒப்புக்கொண்டாலும், தமிழகத்தை பொறுத்தவரை பாரதிய ஜனதா அமைத்திருக்கும் கூட்டணி, ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி என்றுதான் பலரும் கூறியுள்ளனர்.

தனி ஈழம் அமைக்க ஆதரவு இல்லை என்று கூறும் பாரதிய ஜனதாவுடன், தனி ஈழம் வேண்டும் என்ற மதிமுக கூட்டணி அமைத்திருப்பதும், நடிகர்களை வெறுக்கும் கட்சியான பாமகவும், நடிகரின் தலைமையில் இருக்கும் தேமுதிகவும் ஒரே கூட்டணியில் இருப்பது குறித்தும் கருத்து தெரிவித்த பலர் இது ஒரு சந்தர்ப்பவாத கூட்டணிக்கு எடுத்துக்காட்டு என்பதை தெளிவாக தெரிவித்துள்ளனர்.

10ஆண்டு கால காங்கிரஸ் அரசில் அங்கம் வகித்த திமுக, தமிழக நலனுக்காக எவ்வித முயற்சியும் செய்யவில்லை என்றும், கடைசி நேரத்தில் கூட்டணியை விட்டு வெளியே வந்து காங்கிரஸ் தனக்கு துரோகம் செய்ததாக கூறுவது நாடகத்தின் உச்சகட்டம் என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழகத்திற்கு தேவையான வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற தமிழக நலனில் அக்கறை உள்ள ஒரு கட்சி மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்க வேண்டியது அவசியம் என்றும், இன்றைய சூழ்நிலையில் அதிமுக தலைமையிலோ அல்லது அதிமுக அங்கம் வகிக்கும் ஒரு மத்திய அரசோ அமைந்தால்தான் தமிழக நலனுக்கு நன்மை பயக்கும் என்று 90% மக்கள் கருத்து தெரிவித்தனர்.

தமிழகத்தில் அதிமுக 30 முதல் 35 தொகுதிகள் வரை வென்றால் மட்டுமே மத்தியில் தமிழகத்தின் குரல் ஓங்கி ஒலிக்கும் என்று இ­­­­ந்த கருத்துக்கணிப்பின் மூலம் தெரிய வருகிறது.

எங்களது கருத்துக்கணிப்பின்படி தேர்தல் முடிவு இப்படித்தான் இருக்கும்

 

அதிமுக                                        30- 35 தொகுதிகள்

பாரதிய ஜனதா கூட்டணி      2-4 தொகுதிகள்

திமுக கூட்டணி                        2-4 தொகுதிகள்

Leave a Reply