6அம்மா உணவகம், அம்மா குடிநீர் பாட்டில்களில் இருக்கும் முதல்வரின் படம், அவைகளில் உள்ள அம்மா என்ற எழுத்துக்கள், எம்.ஜி.ஆர் சமாதியில் உள்ள இரட்டை இலை சின்னம், மினி பேருந்துகளில் இருக்கும் இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை மறைக்க நடவடிக்கை எடுக்குமாறு மு.க.ஸ்டாலின் தொடுத்த வழக்கிற்கு இன்று தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.

இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அளித்த மனுவில் அம்மா என்ற வார்த்தை பொதுவானது என்பதால் அதை நீக்கவேண்டிய அவசியம் இல்லை என்றும், ஆனால் குடிநீர் பாட்டில், மற்றும் அம்மா ஓட்டல்களில் உள்ள முதல்வரின் படம் அகற்றப்படும் என்றும், எம்.ஜி.ஆர் சமாதியில் உள்ள இரட்டை இலையை மறைக்கவேண்டிய அவசியம் இல்லை என்றும், மினி பேருந்துகளில் உள்ள இரட்டை இலை சின்னம் அழிக்கப்படும் என்றும் பதிலளித்துள்ளது.

மேலும் இந்த வழக்கு குறித்த விசாரணை வரும் திங்கட்கிழமை தொடர்கிறது

Leave a Reply