shadow

சூர்யா படத்துக்கு எட்டு பாடல்கள். அனிருத் அசத்தல்

சூர்யா நடித்து வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்திற்கு இசையமைத்து வரும் இசையமைப்பாளர் அனிருத், இந்த படத்திற்காக எட்டு பாடல்களை கம்போஸ் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘நானும் ரவுடிதான்’ படத்திற்கு இசையமைத்த அனிருத் அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் இயக்கி வரும் அடுத்த படமான ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்திற்காக அனிருத் எட்டு பாடல்களை கம்போஸ் செய்துள்ளதாகவும், எட்டு பாடல்களும் இந்த ஆண்டின் ஹிட் பாடல்கள் வரிசையில் இணையும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சூர்யா, கீர்த்திசுரேஷ், செந்தில், சரண்யா பொன்வண்ணன், ரம்யா கிருஷ்ணன், கோவை சரளா, கே.எஸ்.ரவிகுமார், ஆனந்த்ராஜ், ஆர்ஜே பாலாஜி, சுரேஷ்மேனன், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply