ஜூலை 1 முதல் அமல்.. டெபிட், கிரெடிட் கார்டு புதிய முறை.

வங்கி வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு மோசடிகளை தடுக்கும் நோக்கத்தில் கூகுள் பே, போன்பே, நெட்ப்ளிக்ஸ் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் கிரீட் அல்லது டெபிட் கார்டு விவரங்களை சேமித்து வைக்கக்கூடாது என்று ரிசர்வ் வங்கி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த விதிகள் ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.

அதனால் இனி டெபிட் கார்டு பரிவர்த்தனைகள் செய்யும் முறையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இனி இதற்கான பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட டோக்கனை பயன்படுத்தி பரிவர்த்தனைகள் நடைபெறும்.