shadow

இன்றும் நாளையும் சென்னையில் கல்விக் கண்காட்சி!
education
பிளஸ் டூ மாணவர்களின் உயர்கல்வி கண்காட்சியை ‘ தி நியூ இந்தியன்’ எக்ஸ்பிரஸ் “எடெக்ஸ்’ கல்வி சிறப்பிதழ் சார்பில், (Edex Education Expo 2016)  வரும் மார்ச் 26, 27 தேதிகளில் நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது.

இந்த கல்வி கண்காட்சியில் தென் இந்தியாவின் பல முக்கிய கல்வி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம், கடல்சார் உயிரியல், (Marine Biology), கலை-அறிவியல், கணினி வரைகலை மற்றும் அனிமேஷன், தனித் திறன் (Soft Skills) ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் 50-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் ஒருங்கிணைகிறது. அந்தந்த துறையைச் சார்ந்த வல்லுநர்கள் சிறப்புரையாற்றுகின்றனர். தற்போது பிளஸ் 2 படிப்புகள் படித்து மேற்படிப்புக்குச் செல்ல உள்ள மாணவ-மாணவிகளுக்கு பயனுள்ள குறிப்புக்களும் இந்தக் கல்வி கண்காட்சியில் தரப்படும். பெற்றோர்களும் மாணவர்களும் வல்லுநர்களுடன் கலந்துரையாட வசதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவர்கள் தங்கள் மேற்படிப்பிற்கான துறையை தேர்வு செய்துகொள்ள உதவும்.

பொது அமைப்பில் அல்லாத பிற மேற்படிப்புக்களைப் பற்றிய விவரங்களும் இந்தக் கண்காட்சியில் கிடைக்கப் பெறலாம். கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுடைய புதிய கண்டுபிடிப்புக்களை இந்தக் கண்காட்சியில் பார்க்கலாம். விதவிதமான இயந்திரங்களை (ரோபோ) வைத்து ஒரு போட்டியும் நடைபெற உள்ளது. துறை வல்லுநர்களின் சிறப்புரை, மேற்படிப்புக்கான வழிகாட்டி என இந்த கல்வி கண்காட்சியில் பங்குபெற்று பயனடைய நிறைய விஷயங்கள் உள்ளது. இவை தவிர பார்வையாளர்களுக்கு ஒரு பரிசு உண்டு! ஆம் டாப் (Tab) பரிசு வெல்ல வேண்டும் எனில் கல்வி கண்காட்சியில் பங்கு பெற்று ஒரு டாப்பை பரிசாக வெல்லலாம்.

இந்தக் கல்வி கண்காட்சி, விஐடி பல்கலைக்கழகம், மீனாட்சி கல்வி நிறுவனக் குழுமம் மற்றும் சக்தி மாரியம்மன் பொறியியல் கல்லூரி ஆகியோர் இந்த நிகழ்ச்சியின் பங்களிப்பாளர்கள். கடந்த வருடங்களைப் போலவே மாணவர்களின் உயர்கல்விக்கான முக்கிய  பங்களிப்பாளராக ‘தி நியூ இந்தியன் எக்ஸ்ப்ரஸ்’  இருப்பதில் பெருமை கொள்கிறோம். இந்த மாபெரும் கண்காட்சியில் மாணவர்கள் உற்சாகமாகப் பங்கு கொண்டு பயன்பெறுமாறு அழைக்கிறோம்.

இரண்டு நாள் கல்வி கண்காட்சியில் பங்கேற்க நுழைவுக் கட்டணம் ஏதுமில்லை. அனைவருக்கும் இலவசம்.

மேலும், விவரங்களுக்கு 9282438120, 9789667626.

Leave a Reply