shadow

தமிழகத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது என்பது தெரிந்ததே

இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் அனைவரும் 2 டோஸ் தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் என்று விதிமுறை விதிக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் சற்று முன் பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் ஆகஸ்டு 27ஆம் தேதிக்குள் தடுப்பூசி போட்டுக் கொண்ட சான்றிதழை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது