கல்லூரிகளுக்கு விடுமுறை, ஆனால் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை: தமிழக அரசு

students

ஜனவரி 31ஆம் தேதி வரை அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்ட போதிலும் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழக்கம்போல் நேரடி வகுப்புகள் உண்டு என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பில், 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மற்றும் நேரடி வகுப்புகள் இயங்கும் என்றும் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன்வகுப்புகள் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது

தடுப்பூசி செலுத்தப்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை என்றும், தடுப்பூசி செலுத்தப்படாத பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என்ற அறிவிப்பு பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.