shadow

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கடந்த 2011ம் ஆண்டு முதல் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டது.கொரோனா மாணவ, மாணவிகளுக்கு வினியோகிக்கப்பட முடியாமல் தேங்கிப் போனது.

தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. எனவே கல்வித்துறை வசமுள்ள இலவச மடிக்கணினிகளில் அதிமுக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அதை நீக்க கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவை தொடர்ந்து அனைத்து மாவட்ட அதிகாரிகளும் மடிக்கணினியில் புகைப்படத்தை நீக்கும் பணியை விரைவில் செய்து முடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.