சோதனைகளை சாதனையாக்கும் கட்சி அதிமுக: எடப்பாடி பழனிசாமி அறிக்கை

சோதனைகளை சாதனையாக்கிய கட்சி அதிமுக என்றும் திமுக அரசு தரும் சோதனைகளை அதிமுக தொண்டர்கள் உதவியுடன் முறியடிக்கும் என்றும் முன்னாள் முதல்வரும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

மேலும் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை என்ற பெயரில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களை தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கும் திமுக அரசுக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்