1ஆம் தேதி வேலை நிறுத்தம்: மின்வாரிய ஊழியர்கள் அதிரடி அறிவிப்பு

மின்சார சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதை கண்டித்து அடுத்த ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தம் மேற்கொள்ள மின்வாரிய ஊழியர்கள் முடிவு செய்திருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

அதுமட்டுமின்றி டிசம்பர் 15ஆம் தேதி டெல்லியை நோக்கி மின்வாரிய ஊழியர்கள் பேரணி நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்

மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது