டெல்லியில் திடீர் பூகம்பம்: வீட்டை விட்டு வெளியேறிய பொதுமக்கள்

டெல்லியில் திடீர் பூகம்பம்: வீட்டை விட்டு வெளியேறிய பொதுமக்கள்

டெல்லியில் ஏற்கனவே கடுமையான பனி பொழிந்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளிவந்த நிலையில் சற்றுமுன்னர் டெல்லி, என்.சி.ஆர், நொய்டா ஆகிய பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த பூகம்பம் பஞ்சாப் மாநிலத்திலும் உணரப்பட்டதாகவும், டெல்லியை விட பஞ்சாபில் நில அதிர்வு சற்று வலுவாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

சுமார் ஒரு நிமிடம் நீடித்த இந்த நில அதிர்வால், பொதுமக்கள் கட்டடங்களை விட்டு வெளியேறி அச்சத்துடன் தெருவில் நிற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நில அதிர்வு குறித்த சேதம் குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை.

Leave a Reply