சாலமன் தீவுகளில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் பொதுமக்கள் அச்சம்!

சாலமன் தீவுகளில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் பொதுமக்கள் அச்சம்!

சாலமன் தீவுகளில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதி மக்கள் கடும் அச்சத்துடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

நேற்று இந்தோனேசியாவின் ஜாவா தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று சாலமன் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது

பூமியின் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக அந்த பகுதியில் உள்ள கட்டிடங்கள் விழுந்து விழுந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன

மேலும் இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 7.3 என்ற அளவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே நேற்று ஏற்பட்ட நில நடுக்கத்தில் 162 பேர் பலியாகி உள்ள நிலையில் இன்றைய நிலநடுக்கத்தில் எத்தனை பேர் பலியாகினர் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை