விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அவலூர்பேட்டை என்ற கிராமம் உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. நேற்று பிற்பகலில் இந்த கிராமத்தில் திடீரென வெடிகுண்டு வெடித்தது போல் பயங்கர சத்தம் கேட்டது. சில வினாடிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகளில் இருந்த பாத்திரங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் கீழே விழுந்து உருண்டன.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த கிராம மக்கள் அலறியடித்து கொண்டு வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். பீதியுடன் வெகு நேரமாக தெருவிலேயே நின்றிருந்தனர். பின்னர் வேறு எந்த அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை. எனவே அவர்கள் அச்சம் நீங்கி வீடுகளுக்கு திரும்பினர்.

நிலநடுக்கம் சம்பவம் பற்றி தகவல் பரவியதால் செஞ்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply