நியூசிலாந்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகியிருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு கடற்பகுதியில் 125 கி.மீட்டர் தொலைவில் 25 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்து எனவும் இதனால் பெரும் அளவில் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று நியூசிலாந்து அரசு தெரிவித்துள்ளது. இதே பகுதியில் கடந்த 2009ம் ஆண்டு 7.8 ரிக்டர் அளவில் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply