ஈரானில் உள்ள ரஷ்யாவின் அணு உலை உள்ள பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 7 பேர் பலியாயினர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஈரானில் போராஷ்ஜான் அருகே நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் போராஷ்ஜான் மற்றும் துறைமுக நகரமான புஷெரை சுற்றியுள்ள 60 கி.மீட்டர் சுற்றளவில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. அதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர்.
இங்கு 5.6 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply