shadow

ஹவாய் தீவில் பயங்கர நிலநடுக்கம்: எரிமலை வெடித்ததால் பரபரப்பு

ஹவாய் தீவில் நேற்று 5.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அங்குள்ள லெய்னானி எஸ்டேட் என்ற இடத்தில் உள்ள எரிமலை வெடித்து பயங்கர நெருப்புடன் கூடிய புகையை வெளியேற்றி வருவதால் அந்த பகுதியில் பதட்டம் அதிகரித்துள்ளது.

சுமார் 183 மீட்டர் தூரத்திற்கு எரிமலை குழும்பு பரவியுள்ளதன் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் 1500-க்கும் மேற்பட்ட மக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அரசு எச்சரித்துள்ளது

இந்நிலையில், எரிமலை வெடிப்பு ஏற்பட்ட பகுதிக்கு தெற்கு திசையில் நேற்றிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பெர்ன் காடுகளுக்கு தென்கிழக்கு திசையில் சுமார் 17.7 கிலோ மீட்டர் தொலைவிலும், கடல் மட்டத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் ஆழத்திலும் ரிக்டர் அளவுகோலில் 5.7 அலகுகளாக பதிவானது என அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை.

 

Leave a Reply