அமெரிக்காவில் சில பகுதிகளில் தொடர்ந்து நில அதிர்வுகள் உணரப்பட்டது மக்கள் மத்தியில் பீதியை உண்டாக்கியுள்ளது. ஒக்லகோமா நகரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் குலுங்கின. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும், ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவான மற்றொரு நிலநடுக்கம் ஒக்லகோமா நகரின் வடக்கு பகுதியில் உணரப்பட்டது.
அதற்கு முன்னதாக மாலை 6 மணி அளவில் ஸ்டில்வாட்டர் பகுதியின் தென் கிழக்கில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 2.9 ஆக பதிவாகியிருந்தது. இதே பகுதிகளில் ஏற்கனவே 2.8 மற்றும் 3.1 அளவில் நிலநடுக்கம் கடந்த வார இறுதியில் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply