துபாயில் நடந்து வரும் மகளிருக்கான துபாய் ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்டை எட்டியுள்ளது. நேற்று நடந்த லீக் சுற்றில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

நேற்று நடந்த ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், ரஷ்யாவின் எகத்ரினா மகரோவாவுடன் மோதினார். இந்த போட்டியில் ரஷ்ய வீராங்கனையை செரீனா 7-6, 6-0 என்ற செட் கணக்கில் மிக எளிதாக வீழ்த்தினார்.

மற்றொரு சுற்றில் டென்மார்க்கின் கரோலின் வோஸியாக்கி, செர்பியாவின் இவானோவிச் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

இரட்டையர் பிரிவு முதல் சுற்றுப்போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா ஜோடி செக் குடியரசு ஜோடியிடம் தோல்வி அடைந்தது.துபாயில் நடந்து வரும் மகளிருக்கான துபாய் ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்டை எட்டியுள்ளது. நேற்று நடந்த லீக் சுற்றில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

நேற்று நடந்த ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், ரஷ்யாவின் எகத்ரினா மகரோவாவுடன் மோதினார். இந்த போட்டியில் ரஷ்ய வீராங்கனையை செரீனா 7-6, 6-0 என்ற செட் கணக்கில் மிக எளிதாக வீழ்த்தினார்.

மற்றொரு சுற்றில் டென்மார்க்கின் கரோலின் வோஸியாக்கி, செர்பியாவின் இவானோவிச் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

இரட்டையர் பிரிவு முதல் சுற்றுப்போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா ஜோடி செக் குடியரசு ஜோடியிடம் தோல்வி அடைந்தது.

Leave a Reply