கொரோனா பரபரப்பிலும் போதை பொருள் விற்ற இளைஞர்கள்: அடித்து நொறுக்கிய போலீஸ்

கொரோனா பரபரப்பிலும் போதை பொருள் விற்ற இளைஞர்கள்: அடித்து நொறுக்கிய போலீஸ்

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள இந்த நேரத்தில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்வதற்கே பெரும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன

இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இரண்டு இளைஞர்கள் போதை பொருள் விற்பனை செய்வதாக தகவல்கள் வெளிவந்ததை அடுத்து அதிர்ச்சி அடைந்த அம்மாநில போலீசார் அந்த இரண்டு இளைஞர்கள் போதை பொருள் விற்பனை செய்த இடத்தை சுற்றி வளைத்து இருவரையும் அடித்து நொறுக்கினர்

இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கொரோனா வைரஸால் நாடே அல்லோலபட்டு கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இரண்டு இளைஞர்கள் போதை பொருளை கூவிக்கூவி பொதுமக்களிடம் விற்பனை செய்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply