குட்டை பாவாடை அணியும் பெண்களுக்கு சரக்கு இலவசம்: ஒரு இரவு விடுதியின் வித்தியாசமான விளம்பரம்

குட்டை பாவாடை அணியும் பெண்களுக்கு சரக்கு இலவசம்: ஒரு இரவு விடுதியின் வித்தியாசமான விளம்பரம்

இரவு விடுதிகளில் வாடிக்கையாளர்களை கவர அவ்வப்போது சலுகைகள் அறிவிக்கப்படும் நிலையில் குட்டை பாவாடை அணிந்து வரும் பெண்களுக்கு அவர்கள் குடிக்கும் சரக்கு முழுவதும் இலவசம் என்று பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒரு இரவு விடுதி விளம்பரம் செய்துள்ளது.

பிரான்ஸ் நாட்டில் உள்ள ஜெயண்ட் லாரண்ட் டு வார் (Siant Laurent Du Var) பகுதியில் உள்ள எல் அன்னெக்சி (L’Annexe) என்ற இரவு விடுதி ஒன்று இயங்கி வருகிறது. இந்த விடுதிக்கு பெண்களின் வருகை கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறதாம். பெண்களின் வருகை குறைந்ததால் ஆண்களின் வருகை குறைந்துள்ளது.

இதனால் பெண்களின் வருகையை அதிகரிக்க முடிவு செய்த விடுதி நிர்வாகிகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்று 25 செ.மீ நீளத்தில் குட்டைப் பாவாடை அணிந்து வரும் பெண்களுக்கு விடுதியில் அனுமதியும் சரக்கும் இலவசம் என்று அறிவித்துள்ளது. இந்த சலுகையின் காரணமாக பெண்களின் வருகை ஒருபக்கம் அதிகரித்தாலும், இன்னொரு பக்கம் பெண்கள் அமைப்பினர்களிடம் இருந்து கண்டனம் எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.