பொன்னேரி பேரூராட்சிக்கு 95 லட்ச ரூபாய் இழப்பை எற்படுத்திய 983 குடிநீர் குழாய் இணைப்புகளை துண்டிக்கும் பணிகள் துவங்கப்பட்டது.

பொன்னேரி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பில் 20 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இதனையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள செயல் அலுவலர்களை கொண்டு பொன்னேரி பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் உள்ள குடிநீர் இணைப்பு பணி குறித்து ஆய்வு செய்து மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.

அந்த அறிக்கையில் சென்ற ஆண்டு 1001 பேர் முறையற்ற வகையில் அனுமதியில்லாமல் குடிநீர் இணைப்பு பெற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கலெக்டர் வீரராகவராவ் உத்தரவின் பேரில் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ஜான்சிராணியின் ஆலோசனையின் பேரில் பொன்னேரி பேரூராட்சியில் அனுமதியில்லாமல் தற்போது உள்ள 983 குடிநீர் இணைப்புகளை துண்டிக்கும் பணியை முதலாவது வார்டில் நேற்று செயல் அலுவலர் தேவதாஸ் துவக்கி வைத்தார்.

Leave a Reply