shadow

இந்து கோவில்களை அடுத்து கிறிஸ்துவ சர்ச்சுகளிலும் ஆடை கட்டுப்பாடு

தமிழககத்தின் ஒருசில இந்து கோவில்களிலும், கேரளாவில் உள்ள பல கோவில்களிலும் ஆடை கட்டுப்பாடு இருந்து வரும் நிலையில், தற்போது கேரளாவில் உள்ள சர்ச்சுகளிலும் ஆடை கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக , கேரளாவில் உள்ள பல பாரம்பரியமிக்க சர்ச்சுகளில் திருமணத்தன்று மணமகள் வெள்ளை கவுன் அணிந்து வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக, மணமகள் இந்திய பாரம்பரியப்படி சேலை அணிந்து தான் வர வேண்டும் என்று தற்போது கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மிகவும் மிகவும் புகழ்பெற்ற, பழமையான பருமலா சர்ச்சின் பங்குத்தந்தை குரியகோஸ் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‛மணமகள் கவுன் அணிந்து வருவதை நாங்கள் விரும்பவில்லை. சேலை அணிந்து வரவே அறிவுறுத்தியுள்ளோம். இந்த தடை இங்கு பல மாதங்களாக அமலில் உள்ளது,’ என்று கூறினார்.

Leave a Reply