மரணமடைவதற்கு முன்பு கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்திய டாக்டர் சேதுராமன்

கண்ணா லட்டு திங்க ஆசையா என்ற படம் உள்பட ஒருசில படங்களில் நடித்தவர் நடிகரும் டாக்டருமான சேதுராமன். இவர் நேற்று இரவு மாரடைப்பால் திடீரென மரணமடைந்தார்

இந்த நிலையில் மரணம் அடைவதற்கு முன்பு அவர் கொரோனா குறித்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது

இந்த வீடியோவில் டாக்டர் சேதுராமன் கூறியிருப்பதாவது: கொரோனா வைரசை தடுக்க முதலாவது தனிமைப்படுத்துதல் முக்கியம். தனிமைப்படுத்துதலை யாரும் கவனக்குறைவாக நினைக்க வேண்டாம்.

அடுத்ததாக வயதானவர்கள் வீட்டில் இருந்தால் தயவு செய்து அவர்களை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். வயதானவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் அவர்களை கொரோனா எளிதில் தொற்றிக்கொள்ளும். எனவே தான் அவர்களை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்

அடுத்ததாக இன்கியூபேஷன் பீரியட். கொரோனா வைரஸ் ஒருவரைப் தொற்றினால் 5 முதல் 14 நாட்கள் வரை எந்தவித அறிகுறியும் தெரியாமல் கூட இருக்கலாம். எனவேதான் இந்த காலகட்டத்தில் தயவுசெய்து தனிமைப்படுத்த வேண்டும். இந்த நேரத்தில் நீங்கள் வைரஸை அடுத்தவருக்கு பரவும் வாய்ப்பு இருக்கிறது.

மேலும் நமக்காக தங்கள் குடும்பங்களை கூட பிரிந்து மருத்துவர்கள், நர்ஸ்கள், மருத்துவ ஊழியர்கள் அனைவரும் உயிரை கொடுத்து வேலை செய்து வருகின்றார். நமக்காக பாடுபடுகிறார்கள். அவர்களுக்கு நாம் செய்யும் ஒரே உதவி கொரோனா மேலும் பரவாமல் இருக்க நாம் அனைவரும் வீட்டில் இருந்து செய்யும் உதவிதான்.

இவ்வாறு டாக்டர் சேதுராமன் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

Leave a Reply