அமெரிக்காவில் தாயின் இறுதிச்சடங்கை முடித்துவிட்டு திரும்பிய மகள் விபத்தில் மரணம்.

அமெரிக்காவில் தாயின் இறுதிச்சடங்கை முடித்துவிட்டு திரும்பிய மகள் விபத்தில் மரணம்.
accident
அமெரிக்காவில் தாயின் இறுதிச்சடங்கை முடித்துவிட்டு அவருடைய சாம்பலை எடுத்து கொண்ட வீடு திரும்பி கொண்டிருந்த ஒரே மகள் வரும் வழியில் விபத்து ஏற்பட்டு பரிதாபமாக பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள Salt Lake County என்ற பகுதியை சேர்ந்தவர் 48 வயது Danielle Marqueze Valle என்பவர். இவருடைய தாயார் திடீரென மரணம் அடைந்துவிட்டதால் அவருடைய இறுதிச்சடங்கை முடித்துவிட்டு சாம்பலையும் ஒரு பாத்திரத்தில் சேகரித்துவிட்டு காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை திடீரென இழந்து பலமுறை சாலையோரத்தில் உருண்டது. இந்த விபத்தில் Danielle Marqueze Valle சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார். டிரைவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தாயின் இறுதிச்சடங்கை முடித்துவிட்ட வந்த மகளுக்கு நேர்ந்த விபத்து காரணமாக அவருடைய உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவர்களுடைய மரணம் அந்த பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

accident 1

Chennai Today News: Double Tragedy: Woman dies in car crash on way to her mother`s funeral

Leave a Reply